தன்னார்வ தொண்டர்

தன்னார்வத் தொண்டர்களும் பூவற்கரையானும். அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை, தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர் பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியையும் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணிச் செய்து முன்னோடியாக இருந்தமையால், "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும். அதே போல் இன்று தன்னார்வத் தொண்டர்கள் ஒன்று சேர்ந்து தாமாக முன்வந்து வதிரியின் காவல் தெய்வம் வதிரி பூவற்கரையானுக்கு சரியைத் தொண்டு செய்து வருகிறார்கள். தங்கள் நேரத்தையும் கொடுத்து தங்களால் இயன்ற பணங்களையும் சேர்த்து அருமையான திட்டங்களை வழிவகுத்து பூவற்கரையானுக்கு தொண்டு செய்து வருகிறார்கள். இச் செயல் வரும் அப்பனின் கும்பாபிஷேக பெரு விழாவிற்கு பெரும் பலம் என ஆலயத்தின் மூதாதைகள் அபிமானிகள் பலர் கருதுகின்றனர்.இது போற்றக்கூடைய ஒரு விசயம். ஆலயத்திற்கு இறைவனுக்கு நாம் தொண்டு செய்ய யாரையும் கேட்கவேண்டிய அவசியமில்லை. ஆண்டவனுக்காக நாம் நம் மனம் விரும்பி எதைச் செய்தாலும் அவர் அன்போடு ஏற்பார். அதன் படி அவர் நமக்கு நல் வழியும் கருணையும் காட்டுவார். இதற்கு பல கதைகளும் இருக்கிறது அதில் ஒன்ற்தான் கண்ணப்பநாயனார் கதை ..... இறைவனுக்காகாக மாமிசம் படைத்து வணங்கினார் ஒரு வேடன், தன்னிடம் உள்ள மாமிசத்தையே படைத்தார் அவர். அவர் வேறு யாருமல்ல இறைவனுக்காத் தன் கண்ணையே தான மாக தோண்டிக் கொடுத்த கண்ண்ப்பநாயனார் தான் அந்த வரிசையில் இன்று தாமாகவே முன்வந்து ஆலயத்திற்கு தொண்டு செய்யும் படித்த இளைஞர் களையும்,வாலிபர்களையும்,குழந்தைகளையும் நாம் போற்று வோமாக. அவர்களுடன் நாமும் இணைவோமாக “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”
பூவற்கரையான் வரலாற்றில் இடம்பெற்ற இன்னொரு சரித்திர நிகழ்வு. அனைவருக்கும் எம்பெருமானின் ஆசிகள் என்றென்றும் உண்டு.
எமது ஆலயத்தில் நடைபெறும் திருப்பணிகளில் பழைய நிலத்தை அகற்றி புதிய‌ நிலம் போடுவதற்கு 10 இலட்சம் ரூபா வேண்டும். அதற்கான பணம் கையிருப்பில் இல்லை. என்ன செய்வது எப்படி பணத்தைச் சேர்ப்பது என நிர்வாகம் சில முடிவுகளை எடுத்தது. இதனை அறிந்த பூவற்கரை பிள்ளையார் ஆலய தன்னார்வத் தொண்டர்கள் தாமாக முன்வந்து அந்தப் பொறுப்பை ஏற்றார்கள். வேலை முடிந்ததும் மேலதிகமாக பணம் இருந்தால் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாகவும், பண‌ப் பற்றாக்குறை ஏற்பட்டால் அதனை தாம் பொறுப்பெடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர். நிலத்தைக் கொத்தி மட்டப்படுத்த வேண்டும். காலையில் தண்ணீர் அடிக்க வேண்டும் என இரவு முடிவு செய்தார்கள். இரவிரவாக மழை கொட்டித்தீர்த்தது. எதுவித சிரமமும் இல்லாமல் தன்னார்வத் தொண்டர் படையணி ஒரே நாளில் நிலத்தை மட்டப்படுத்தி விட்டது. பாலாலயத்தில் இருந்தாலும் பூவற்கரை பிள்ளையார் பல அற்புதங்களைக் காட்டிவிட்டார். அவர் என்ன நினைக்கிறார் என்பது எமக்கு வெளிப்படையாகத் தெரியாது. தான் விரும்பியதை நிறைவேற்றுகிறார். ஆக்கமும் ஊக்கமுமன்றி ஆனதாக ஏதும் செய்ய முடியாது. ஆலயத்திற்கான தொண்டுகளில் இரண்டே இரண்டு தொண்டுகள் சரியை தொண்டு, கிரியை தொண்டு. நிதி என்பது தொண்டல்ல தம்மிடம் இருக்கும் இருப்பின் அடிப்படையில் மனதார இறைபணிக்காக அர்ச்சிக்கப்படுவதே நிதி . ஒரு ரூபா குடுப்பதும் ஒரு கோடி கொடுப்பதும் ஆலய பணியில் சம அளவிலேயே கருத்திற்கொள்ளப்படும். எம் மூதாதையர்கள் அமைத்த புதுமை மிகு விநாயகன் எங்கள் பூவற்கரையான் , அவன் அருளில் இளைஞர் வெற்றித்திட்டங்கள் இன்னும் பல வதிரியை அலங்கரிக்க வேண்டும், அலங்கரிக்கும்.
வதிரி, பூவற்கரை பிள்ளையார் ஆலய தன்னார்வத் தொண்டர் திருப்பணி 26.09.2012 காலை சுபவேளையில் விஷேட பூஜையுடன் ஆரம்பமானது.
பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணிச் செய்து முன்னோடியாக இருந்தமையால், "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்படும் நாவுக்கரசர், இறைவனுக்காத் தன் கண்ணையே தான மாக தோண்டிக் கொடுத்த கண்ண்ப்பநாயனார், போன்றோர் வரிசையில் இன்று தாமாகவே முன்வந்து ஆலயத்திற்கு தொண்டு செய்யும் படித்த இளைஞர் களையும்,வாலிபர்களையும்,குழந்தைகளையும் நாம் போற்று வோமாக. அவர்களுடன் நாமும் இடையூறின்றி இணைவோமாக “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”
தன்னார்வத் தொண்டர்களின் திருப்பணி தொடர்கிறது
வதிரி வாழ் தன்னார்வ தொண்டர்களின் "கொங்கிறீட் வேலைத்திட்டம்" வதிரியின் சரித்திர மைந்தர்களுக்கு பாராட்டுக்களும்.
தன்னார்வத் தொண்டர்களின் செயற்பாட்டினை நினைக்கும் போது வியப்பாக உள்ளது.அச் செயற்பாட்டில் வயது வித்தியாசமின்றி ஈடுபட்ட அத்தனை தொண்டர்களையும் பாராட்டுவதுடன் அவர்களின் செயற்பாட்டிற்கு உறுதுணையாக காலை,மதியம்,இரவு உணவுகளையும் தேனீர்,குளிர்பானங்கள் என வாரி வழங்கிய இரத்த உறவுகளுக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் அனைவ௫க்கும் பூவற்கரையான் அ௫ட்கடாட்சம் வேண்டி பிரார்த்திக்கின்றேன். பூவற்கரையானின் நம்பிக்கையோடு ஆரம்பித்த திட்டம் வெற்றிகரமாக முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியடைகின்றோம். இந்த வரலாற்று வெற்றிகர திட்டத்தினை எங்கள் மூவர் சார்பாக கருதாது எமது கிராமத்தின் அனைத்து தன்னார்வ தொண்டர்கள் சார்பாகவும் கருதுகின்றோம்.
பூவற்கரையானின் நம்பிக்கையோடு ஆரம்பித்த திட்டம் வெற்றிகரமாக முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியடைகின்றோம். இந்த வரலாற்று வெற்றிகர திட்டத்தினை எங்கள் மூவர் சார்பாக கருதாது எமது கிராமத்தின் அனைத்து தன்னார்வ தொண்டர்கள் சார்பாகவும் கருதுகின்றோம். இத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு எம்மோடு ஆலயசபை சார்பாக முழுமையான பங்களிப்பினை நல்கிய செயலாளர் ரவிவர்மா அவர்களிற்கு நன்றிகளை தெரிவிப்பதோடு நிதி சார்பான முற்பண உதவியினையும் கட்டிட கலை சார்பான தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கிய AJS நிறுவன உரிமையாளர் அஜித் சுவேந்திரா அவர்களிற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக திட்டத்தில் இணைந்து தங்களை அர்ப்பணித்த இளைஞர், பெரியவர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், சமையற்கலை வல்லுனர்கள் உதவியாளர்கள், நிதியுடன் கூடிய ஊக்கத்தினை வழங்கிய உள்ளூர் புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். மேலதிக தகவல்களுக்கு:- ? விஸ்வா :- 0094 761593272 ? பிரதீபன் :- 0094 756435959 ? ரிசிகேசன் :- 0094 775092710
Loganathan Vijendran பூவற்கரையான் தன்னார்வ தொண்டர்களின் அன்பான அறிவித்தல் “நமக்காக நாம”என்ற திட்டத்தின் அடிப்படையில் நாளைய தினம் அனைத்து தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும் குறிப்பிட்டவேலையை குறித்த நேரத்துக்குள்ளாக முடிக்க வேண்டும்.நேரம் தாழ்த்தாமல் சரியாக ஆறு மணியளவில் ஆலயத்திற்கு சமுகமளிக்கவம் =>6.00 AM
Logendraa(BabyArts) தன்னார்வ தொண்டர்களுக்கு தலைவர் இல்லை,செயலாளர் இல்லை, பொருளாளர் இல்லை நானும் ஒரு பூவற்கரையானின் தன்வார்வத் தொண்டன் என்ற வகையில் இதை பகிர்கிறேன். இந்த சின்ன வயதில் ஏனைய தன்னார்வத் தொண்டௌகளோடு இணைந்து இந்த பெரிய திட்டத்தை தானாக முன் வந்து மிகஇலகுவாக செய்து தந்த AJS ENGINEERING உரிமையாள அஜித் அவர்களுக்கும் ஏனைய அப்பர்களுக்கும் என் ந்ன்றிகளும் பாராட்டுக்களும்.உங்கள் அனைவருடன் எப்பொழுதும் அப்பன் பூவற்கரையான் துணை நிற்பான்.@ தொண்டன் லோகேந்திரா (BabyArts)
Kumararasan தன்னார்வத் தொண்டர்களின் செயற்பாட்டினை நினைக்கும் போது வியப்பாக உள்ளது.அச் செயற்பாட்டில் வயது வித்தியாசமின்றி ஈடுபட்ட அத்தனை தொண்டர்களையும் பாராட்டுவதுடன் அவர்களின் செயற்பாட்டிற்கு உறுதுணையாக காலை,மதியம்,இரவு உணவுகளையும் தேனீர்,குளிர்பானங்கள் என வாரி வழங்கிய இரத்த உறவுகளுக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் அனைவ௫க்கும் பூவற்கரையான் அ௫ட்கடாட்சம் வேண்டி பிரார்த்திக்கின்றேன்.
Masilamani Maheswaran பூவற்கரைவாழ் கற்பகமே காவலனே, நன்றே அருள்வாய் நம் குழந்தைகட்கு...
Pathmasri ஆக்கமும் ஊக்கமுமன்றி ஆனதாக ஏதும் செய்ய முடியாது. ஆலயத்திற்கான தொண்டுகளில் இரண்டே இரண்டு தொண்டுகள் சரியை தொண்டு, கிரியை தொண்டு. நிதி என்பது தொண்டல்ல தம்மிடம் இருக்கும் இருப்பின் அடிப்படையில் மனதார இறைபணிக்காக அர்ச்சிக்கப்படுவதே நிதி . ஒரு ரூபா குடுப்பதும் ஒரு கோடி கொடுப்பதும் ஆலய பணியில் சம அளவிலேயே கருத்திற்கொள்ளப்படும். எம் மூதாதையர்கள் அமைத்த புதுமை மிகு விநாயகன் எங்கள் பூவற்கரையான் , அவன் அருளில் இளைஞர் வெற்றித்திட்டங்கள் இன்னும் பல வதிரியை அலங்கரிக்க வேண்டும், அலங்கரிக்கும்.சொல்வதற்கு வார்த்தைகளில்லை. எம் கிராமம் எம் அடையாளம். ஒற்றுமையோடு பயணிப்போம், கும்பாபிசேகத்தினை நடாத்த கொரோனாவை நீக்கி அருள் புரிய பூவற்கரையானை வேண்டுகின்றேன்.
Surega உண்மையில் இன்றைய நாட்டுச்சூழ்நிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிலையில் தங்களை பாதுகாப்பை பாராது தன்னலம் கருதாது பூவற்கரையானுக்கு சேவையாற்றும் அனைத்து தொண்டர்களுக்கும் வாழ்த்துக்கள். என்றும் இறைவன் உங்களுடன்.
சக்தி “தானா சேர்ந்த கூட்டம்” பலர் அருணாச்சலம் மாதிரி சிலர் பாட்சா மாதிரி
Parthepan Thankavel பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணிச் செய்து முன்னோடியாக இருந்தமையால், "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்படும் நாவுக்கரசர், இறைவனுக்காத் தன் கண்ணையே தான மாக தோண்டிக் கொடுத்த கண்ண்ப்பநாயனார், போன்றோர் வரிசையில் இன்று தாமாகவே முன்வந்து ஆலயத்திற்கு தொண்டு செய்யும் படித்த இளைஞர் களையும்,வாலிபர்களையும்,குழந்தைகளையும் நாம் போற்று வோமாக. அவர்களுடன் நாமும் இடையூறின்றி இணைவோமாக “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”
Ehamparam Ravivarma சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேர்ந்துவிட்டது
வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலயம் with Ehamparam Ravivarmah. சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது எனும் பழமொழியை பொய்யாக்கிவிட்டார்கள் எமது ஊரின் தன்னார்வத் தொண்டர்களின் இளைஞர் படையணி. ஆலயத்தின் உட் பிரகாரத்தை புனரமைப்புச் செய்ய 10 இலட்சம் ரூபா வேண்டும். பணம் கையிருப்பில் இல்லை. கொரோனா காரணமாக பணம் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டபோது தன்னார்வத் தொண்டர்களின் இளைஞர் படையணி கைகொடுக்க முன் வந்தது. வேலைத்திட்டங்கள் எவற்றையும் முன்னெடுத்த அனுபவம், ஆற்றல் எதுவும் இல்லாத விஷ்வா, பிரதீபன், ரிஷிகேசன் எனும் மும்மூர்த்திகள் ஆலய உட்பிரகார புனரமைப்பை செய்வதற்கு முன்வந்தார்கள். சின்னப்பொடியங்களிடம் இதனைக் கொடுக்கலாமா என தயங்காமல் ஆலய நிர்வாகம் அந்தப் பொறுப்பை அவர்களிடம் கையளித்தது. ஊருக்கு 100 பேரைத்தரும்படி சுவாமி விவேகானந்தர் அழைப்பு விடுத்தார். இந்த நல்ல காரியத்துக்காக 100 க்கும் அதிகமானவர்கள் கூடினார்கள். வடமராட்சிக்கு வெளியே திருமணம் செய்தவர்கள் குடும்பத்துடன் முதல்நாள் வந்துவிட்டார்கள். அடுத்த ஊர்களில் உள்ள நமது ஊர் இளைஞர்களின் நண்பர்களும் இந்தப்பணியில் இணைந்தார்கள். பயணத்தடை, அத்தியாவசியப் பொருட்களைத்தவிர வேறு பொருட்கள் வாங்க முடியாத நிலை போன்ற தடங்கல்களுக்கு மத்தியில் மூன்று நாட்களுக்கிடையில் சுமார் 6000 சதுர அடி நிலத்துக்குத் தேவையான 300 பக்கற் சீமேந்து,3 டிப்பர் மண், 5 டிப்பர் சிறிய கல் என்பன வந்து சேர்ந்தன. பணம் சேர்ப்பதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டது. இலங்கையில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பணம் கிடைத்தது. 26 ஆம் திகதி புதன்கிழமை காலை 6 மணிக்கு வேலை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது. சரியாக 6 மணிக்கு சிலர் வந்து விட்டார்கள். 8 மணிக்கு 50 க்கும் மேற்பட்டவர்கள் வந்தார்கள். நேரம் செல்லச் செல்ல ஆர்வம் உள்ளவர்கள் ஆலயத்தை நோக்கி வந்தார்கள். 111 பேர் வேலை செய்ததாக அறிய முடிகிறது. 3 சீமேந்து குழைக்கும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. கட்டடப் பொருட்களை ஏற்றி இறக்க லாண்ட்மாஸ்டர் எனும் சிறிய உழவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. காலைச் சாப்பாடும் ,மதிய உணவும் வழங்குவதாக வெளிநாட்டில் உள்ள ஒரு குடும்பம் ஏற்கெனவே ஒப்புதலளித்தது. வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டில் உள்ள இன்னொரு குடும்பம் இரவு உணவு வழங்க பணம் அனுப்பியது. தேநீர், கடலை, குளிர்பானம் ஊரில் உள்ள பலரும் தமது பங்களிப்பை வழங்கினார்கள். வேலை செபவர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காக தேநீர், கடலை, குளிர்பானம் என்பனவற்றை ஒரு குழு அடிக்கடி வழங்கியது. எமது ஊரில் உள்ள 3 தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் [கட்டட வல்லுநர்கள்] 5 தலைமை மேசன்கள், 10 கட்டட உதவியாளர்கள் ஆகியோரின் வழிகாட்டலில் இளைஞர்களும், சிறுவர்களும் வேலை செய்தார்கள். இவர்களுடன் போட்டிபோட்டு வயதான சிலரும் வேலை செய்தார்கள். இப்படியான கஷ்டமான வேலைகள் எதுவும் செய்யாதவர்கள் போட்டிபோட்டு பூவற்கரையானுக்கு தம்மை அர்ப்பணித்தார்கள். நேற்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமான வேலை இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிறைவு பெற்றது. 18 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக வேலை செய்தார்கள். ஆண்களும், பெண்களும் அடிக்கடி வந்து வேலையப் பார்த்து பூரித்துப் போனார்கள். கொழும்பில் உள்ளவர்களும், வெளிநாட்டில் வசிப்பவர்களும் வீடியோ கோலில் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். கடந்த ஒரு வருடத்தினுள் தன்னார்வத்தொண்டர்களின் பணியால் சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டன. கோப்புசம் களட்டியது, ஓடு கழுவியது, ஓட்டுக்கு சாயம் பூசியது, ஓடு வேய்ந்தது,[ ஒரு ஓடு போட 8 ரூபா சுமார் 14 ஆயிரம் ஓடுகள் போடப்பட்டன.] நிலம் அகற்றியது போன்ற வேலைத்திட்டங்களை தன்னார்வத்தொண்டர்கள் முன்னின்று செய்தார்கள். வேலை முடிந்ததும் சுமார் 25 பேர் ஆலயத்தில் படுத்தார்கள். காலை 6 மணிக்கு அவர்களை எழுப்பி பால் தேநீர் கொடுக்கப்பட்டது. இப்போதைக்கு இவர்கள் இந்தப்பக்கம் வரமாட்டர்கள் என நினைத்தேன். 8 மணிக்கு ஒவ்வொருவராக வந்து நேற்று தாம் பட்ட துயரங்களை சொல்லி சந்தோசப்பட்டார்கள். செயற்கரிய செயல்களை செய்வதற்கான ஆற்றலும் ஆளுமையும் அடுத்த தலைமுறையிடம் இருப்பதனால் மகிழ்ச்சியாக இருக்கிறது.
புலம்பெயர் உறவுகள்..... 1 ) கீர்த்தனன் - 10000 (பிரான்ஸ்) 2) ரவிவர்மன் திஷான் - 10000.00 (சுவிஸ்) 3) ராஜவர்மன் சுபாஜினி-10000.00 (லண்டன்) 4) செல்வதாஸ் கிருஷ்ணா-10000.00 (லண்டன்) 5) விஐயரட்ணம் மதனராஜன்-10000.00 (லண்டன் ) 6) ரகுநாதன் ரகுராஜ்- 10000.00 (லண்டன்) 7) ரகுநாதன் அஸ்வின்ராஜ்- 10000.00 (லண்டன்) 8)துஷ்யந்தன் ரித்விக்- 10000.00 (லண்டன்) 9)துஷ்யந்தன் அஸ்வித்- 10000.00 (லண்டன் ) 10)ஆறுமுகம் கமல்- 10000.00 (கனடா) 11) ஆறுமுகம் வினோத்- 10000.00 (கனடா) 12)ஆறுமுகம் மாறன்- 10000.00 (கனடா) 13)இராசையா கௌரிபாலா 10000.00 (லண்டன்) 14)கிருஷ்ணபிள்ளை 10000.00 15)சந்திகா நவறாஜ் 10000.00 (லண்டன்) 16) ஈஸ்வரன் தனுஷ்கா , திருஷிகா,தட்ஷயா 10000.00 (லண்டன்) 17)சத்தியேந்திரா தியா 10000.00 (பிரான்ஸ்) 18) லோகநாதன் சபேசன் 10000.00 (லண்டன்) 19. மீரா மங்களேஸ்வரன் - 10,000/- (பிரான்ஸ்) 20. திரவியராசன் ரவிராஜ் - 10,000/- (துபாய்) இலங்கை வாழ் உறவுகள்..... 1. மஹிமா சந்தோசி மகேஸ்வரன் - 10,000/- 2. குமாரராசன் ஶ்ரீராஜ் - 10,000/- 3. ராஜரஞ்சன் ஆதித்யன் - 10,000/- 4. ராஜரஞ்சன் ஜனுசன் - 10,000/- 5. பொன்ராஜன் ரகுநாத் - 10,000/- 6. கௌசிகன் விஸ்வா - 10,000/- 7. பிறேமதாசன் ரிசிகேசன் - 10,000/- 8. சுரேஸ் பிரதீபன் - 10,000/- 9. வரதராசன் பத்மஶ்ரீ - 10,000/- 10. திரவியசிங்கம் வரதராசன் பத்மஶ்ரீ சஞ்சய்விஹர்சன் - 5,000/- 11. யோகராசா கபில்ராஜ் - 10,000/- 12. பிரசன்னா அஹ்சரன் - 10,000/- 13. பார்த்திபன் புருசோத்மன் - 10,000/- 14. ஜோதீஸ்வரன் சாகித்யன் - 10,000/- 15. வசந்தராஜா ராகுல்பிரசாத் - 10,000/- 16. ஜெயகாந்தன் சாய்சந்தர் - 5,000/- 17. இராசையா இந்திரபாலா - 5,000/- 18. அட்ஜெயலிங்கம் அஜித்சுவேந்திரா - 10,000/- 19. துரைராஜா ஜங்கரன் - 5,000/- 20. செல்வராஜா அஜித் - 5,000/- 21. திலீபன் பிரவீன் - 5,000/- 22. லோகநாதன் விஜேந்திரன் - 10,000/- 23. சுகந்தன் அகர்ஷன் - 5,000/- 24. மகேந்திரராஜா சோபிதன் - 5,000/- 25. மகேந்திரராஜா அச்சுதன் - 5,000/- 26.உசானந்த் பிரனுஷா- 10,000/- 27. லோ ஜெ ஶ்ரீஹர்சித் - 10,000/- 28. பி சாய்ஹர்சவி - 10,000/- 29. இன்பராஜன் சுஜித்திரன் - 10,000/- 30. வீரகுமார் சரத்குமார் - 10,000/- 31. சற்குணன் ஹஸ்வின் - 10,000/- 32. நாகராஜா துஸ்யந்தன் - 10,000/- 33. சர்வோதயன் சுவர்ணா - 10,000/- 34. வினோதன் தட்சிகா - 10,000/- 35. யோகராஜா நிமல்ராஜ் - 10,000/- 36. சிவராஜ் ஆருக்சன் - 10,000/ 37. மனோராஜ் அஹர்வின் - 10,000/- 38. வசந்தராஜா விஸ்ணுபிரசாத் - 10,000/- 39. வசந்தகலாதன் ராமன் - 5,000/- 40. மயூரன் அக்சரன் - 10,000/- 41. முரளிபாரதி அபராஜிதன் - 10,000/- 42. தயாளன் ஹேமிதன் - 10,000/- 43. ஜெயபிரகாஸ் தர்மிகன் - 10,000/- 44. விஜயநாதன் செந்தூரன் - 10,000/- 45. விஜயநாதன் துவாரகன் - 10,000/- 46. ஜெயந்தன் ஹம்சவர்தன் - 10,000/- 47. சிவானந்தம் ரஜினிகாந்தன் - 10,000/- 48. சிவானந்தம் நளினிகாந்தன் - 10,000/- 49. பொன்னுத்துரை பொன்ராஜன் - 10,000/- 50. ஜெகன் சேஷாந் - 5,000/- 51. ஜெகன் பரூசன் - 5,000/- 52. கிருஷாந்தன் கிஷானன் - 5,000/- 53. தவராஜா வர்சன் - 10,000/- யாருடைய பெயராவது தவறவிடபட்டிருந்தால் அறிய தரவும்.