ருத்ராட்சம்


ஏன் ருத்ராட்சம் அணிய வேண்டும்? 

அதில் அப்படி என்ன அற்புதம் இருக்கு?


    ருத்ராட்சை என்பது சிவ பக்தர்கள் அணியும் ஒரு ஆன்மீக அடையாளமாகும். இது பொதுவாக உருண்டை வடிவத்தில் மணி போல் இருக்கும். ருத்ராட்சதில் பலவகை உண்டு. ருத்ரன் என்பது சிவ பெருமானைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும். ஒரு முகம், இரண்டு முகம் என்று 21 முகம் வரை இந்த ருத்ராட்சம் இருப்பதாகக் கூறுகின்றனர்.


இதில் 14 முகம் ருத்ராட்சம் வரை மனிதர்கள் அணிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் 5 முக ருத்ராட்சம் மிகவும் புகழ் பெற்றது. ருத்ராட்ச உற்பத்தியில் 50-60% 5 முக ருத்ராட்ச உற்பத்தியே ஆகும். இந்தோனேசியா ருத்ராட்சம் அளவில் மிகவும் சிறியதாக கருதப்படுகிறது.பல நூறு வருடங்கள் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் கண்களைத் திறந்தபோது, அவர் உணர்ந்த பேரானந்தம், கண்ணீர்த் துளியாய் சிந்தியது. அது பூமியில் விழுந்து ருத்ராட்ச மரமாக வளர்ந்தது, என்பது வழக்கத்தில் இருந்து வரும் கதை

ருத்ராட்சம் அணிந்தாலே, "சாமியாராக போய்விடுவோம்" என்ற ஒரு மாற்று நம்பிக்கை எப்போதும் பரவாலாக இருந்தே வருகிறது. ஆனால் இந்த ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம், இதை அணிவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெளிவாக்குகிறது இக்கட்டுரை

ஐந்து முக ருத்ராட்சம் 
பஞ்சமுகி: 
ஐந்து முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை, 14 வயதுக்கு மேல் உள்ள யாவரும் அணியலாம். இந்த ருத்ராட்சத்தை மாலையாக மட்டுமே அணிய வேண்டும். உள்நிலையில் ஆன்மாவைச் சுத்தப்படுத்த இது உதவும். குறிப்பாக இந்த 5 முக ருத்ராட்சத்திற்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த ருத்ராட்சம் சிவ பெருமானால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று என்று


நம்பப்படுகிறது. இந்த ருத்ராட்சத்தை ஒருவர் பக்தி சிரத்தையோடு அணிவதால் அவருடைய பாவங்கள் அழிக்கப்படுகின்றன. நவகிரகத்தில் குருவின் கட்டுபாட்டில் இயங்கும் இந்த ருத்ராட்சம் தேவ குரு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. தேவர்களுக்கெல்லாம் குரு என்பது இதன் பொருள் ஆகும்.






த்விமுகி: 
இரண்டு முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை திருமணம் ஆனவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். இதை கணவன் மனைவி  இருவரும் அணிய வேண்டும்.



ஷண்முகி: 
இது குழந்தைகளுக்கான ருத்ராட்சம். ஆறுமுகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அணிய வேண்டும். மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் இது அதிகரிக்கும்.




கௌரிஷங்கர்: 
இரண்டு ருத்ராட்சங்கள் ஒட்டி இருப்பது போல இருக்கும் இதை 14 வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் அணியலாம். இது ஈடா, பிங்களா என்கிற சக்தி நாடிகளைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது.




எங்கு அணிய வேண்டும்
ருத்ராட்சத்தை இதயத்திற்கு அருகில் அணிவதால் மிகப் பெரிய நன்மைகள் கிடைப்பதாக அறியப்படுகிறது. மேலும் இதய தொடர்பான கோளாறுகள், டென்ஷன், பதட்டம், இரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சிலர் கைகளில் ருத்ராட்சத்தை அணிந்திருப்பார்கள். பிரேஸ்லெட்டில் இணைத்து அணிவார்கள். அதையெல்லாம் விட, கழுத்தில் அணிவது தான் சிறந்த நன்மைகளைத் தரும்.

அணியும் வழிமுறைகள்
இந்த 5 முக ருத்ராட்சத்தை அணிவதற்கான வழிமுறைகள் உள்ளன. அதனைப் பற்றி இந்த பதிவில் காணலாம். சிவன் கோயிலில் உள்ள பிராமண குருக்களின் மூலமாக ருத்ராட்சத்திற்கு பூஜை செய்து ஆற்றலை செலுத்திக் கொள்ளுங்கள். இந்த பிராண பிரதிஷ்டை பூஜை முடிந்தவுடன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளுங்கள். பண்டிதரிடம் ஆலோசித்து, நல்ல சுப முகூர்த்த நாளைத் தேர்ந்தெடுத்து பிராண பிரதிஷ்டை பூஜையை செய்யுங்கள். தினமும் உங்களால் இந்த ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள முடியாவிட்டால், ஒரு சிறிய பெட்டியில் இதனை வைத்து பூஜை


அறையில் வைத்துக் கொள்ளலாம். இதற்கு தினமும் பூஜை செய்து வரலாம். கனமான நூல் அல்லது கயிறில் கழன்று விடாதபடி, இந்த ருத்ராட்சத்தை அணித்து கொள்ளுங்கள். இந்த ருத்ராட்சம் கீழே நிலத்தில் விழாதபடி ஆழ்ந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள். ருத்ராட்சத்தை அணியும் நாள் நல்ல சுப முகூர்த்த நாளாக இருக்க வேண்டும். குறிப்பாக திங்கள், வியாழன் போன்ற நாட்களாக இருப்பது நல்லது. அடிக்கடி ருத்ராட்சத்தை சுத்தம் செய்யுங்கள். இதன் துளைகளில் அழுக்கு அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்த பிறகு, புனித நீரால் இதனை கழுவுங்கள். இதனால் ருத்ராட்சத்தின் புனிதம் 

பாதுகாக்கப்படுகிறது. ருத்ராட்சத்திற்கு எண்ணெய் தடவுவதை எப்போதும் மறக்க வேண்டாம். சுத்தம் செய்தவுடன் இதற்கு எண்ணெய் விட்டு, ஊதுபத்தி கொண்டு பூஜை செய்யவும். நீண்ட நாட்கள் கழுத்தில் அணியாமல் இதனை பெட்டியில் வைத்திருப்பவர்கள் இந்த முறையை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். ருத்ராட்சத்தின் அளவு மற்றும் வடிவம் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. முகம் சரியாக வரையறுக்கப்பட்டதாகவும், அதன் கோடுகள் தெளிவாக தெரியும்படியாகவும் இருப்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளவும். ருத்ராட்சத்தின் மத்தியில் விரிசல் எதுவும் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக ருத்ராட்சத்தை உள்ளங்கையில் வைத்தவுடன், ஆன்மீக நோக்குள்ளவர்களுக்கு ஒரு அதிர்வு உண்டாகும். இத்தகைய அதிர்வை நீங்கள் உணர்ந்தால், இந்த ருத்ராட்சம் உங்களுக்கு ஏற்றது. இறுதியாக, ருத்ராட்சத்தை அணிந்தவுடன், சிவபெருமானை நோக்கி பக்தியோடு அவரின் ஆசிர்வாதம் மற்றும் கிருபை எப்போதும் கிடைக்க மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.


செய்யக்கூடாதவை 
இந்த 5 முக ருத்ராட்சத்தை எப்போதும் அணிந்திருக்கலாம். குழந்தை பிறந்த வீட்டிற்கு அல்லது இறந்தவர்களின் வீட்டிற்கு செல்லும்போது சிலர் இந்த மணியை கழட்டி விட்டு செல்வார்கள். இந்த ருத்ராட்சம் என்பது உயர் ஆற்றலைக் கொண்ட ஒரு கல் என்று நம்பப்படுவதால் இத்தகைய தீட்டு உள்ள இடங்களுக்கு இதனை அணிந்து செல்லக் கூடாது என்பது நம்பிக்கை. மண் படிந்த அல்லது அழுக்கு கைகளுடன் ருத்ராட்சத்தைத் தொடக் கூடாது. தொடர்ந்து ருத்ராட்சத்தை அணித்து கொள்பவர் மாமிச உணவுகள் உட்கொள்வது மற்றும் மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு இந்த ருத்ராட்சத்தை வாங்குங்கள். மற்றவரிடம் கடனாகப் பெற்ற பணத்தில் இருந்து இந்த சக்தி மிகுந்த ருத்ராட்சத்தை வாங்கி அணியக் கூடாது

ருத்ராட்சத்தின் பலன்கள்:
  • மனம், உடல், சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் நிவாரணியாய், உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது ருத்ராட்சம்.
  • மனதின் சலனங்களைச் சீர் செய்கிறது, தியான நிலையில் மூழ்கவைக்கிறது, சுவாசத்தைச் சுத்தப்படுத்துகிறது, உடலின் ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது எனப் பல்வேறு பலன்களை தருகிறது.
யாரெல்லாம் இதை அணியலாம்:
வயது வரம்பில்லாமல் மொழி, இனம், தேசம், ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சத்தை அணியலாம். இயற்கையாகக் கிடைக்கும் ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு, அதன் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். ஈஷா யோகா மையத்தில் கொடுக்கப்படும் ருத்ராட்சத்தின் தரம், நம்பகத்தன்மை போன்றவை சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுகிறது.
பதப்படுத்துதல்:


புதிதாய் இருக்கும் ருத்ராட்சத்தை சுத்தமான நெய்யில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கொழுப்பு நீக்கப்படாத பாலில் இன்னும் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, சுத்தமான துணியில் துடைத்து அணிந்துகொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை இப்படிச் செய்ய வேண்டும். சுடுநீரிலோ, சோப்போ படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றபடி, எந்த விதிவிலக்கும் இன்றி எல்லா நேரத்திலும் ருத்ராட்சத்தை அணிந்திருக்கலாம். இதற்கு வாழ்க்கை முறையிலோ அல்லது உணவு முறையிலோ எந்த வித கட்டுப்பாடும் இல்லை. இதைக் கழுத்தில் மட்டுமே அணிய வேண்டும். எந்த ஒரு உலோகத்திலும் ருத்ராட்சம் படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். கவனமாகக் கையாளவில்லை என்றால், ருத்ராட்சம் எளிதில் சேதமடைந்துவிடும். உடைந்து, விரிசல்விட்ட, சேதமடைந்த ருத்ராட்சத்தின் சக்திகள் நல்லதல்ல. அவற்றை அணியாமல் இருப்பதே நல்லது!
தளத்திற்காக தொகுப்பு :-நா.லோகேந்திரா