திருவிழா 2012



வதிரி பூவற்கரைப்பிள்ளையார் ஆலயம்
முதலாம் திருவிழா
கொடியேற்றம் 
23.07.2012

சிந்தூரன் தனையழித்து நெற்றியில் திலகமிட்டு
சிங்கார மாகவென்றும் காட்சிதரும் கணபதியே!
எந்நாளும் அருள்தரவே பூவற்கரை தலமமர்ந்து
இடர்கள் களைகின்ற மாவயிற்றுப் பிள்ளையே!
பண்ணோடு பாடலையும் நாதஸ்வர மேளமுடன்
பாங்காக மகோற்சவ கொடியேற்றம் காண்கையிலே!
எந்நாளும் பொன்னாளாய் எல்லோர் மனங்களும்
ஈடேறும் இந்நாளில் நீர்சொரியும் விழிகளிலே !






























23.07.2012:-திங்கள் முதலாம் நாள் மு.ப 11.00 மணி முதல்12.00
வரையுள்ள சுபவேளையில் வெகுசிறப்பாக
கொடியேற்றம் நடைபெற்றது. 
 படப்பிடிப்பு:-ஜெகன் சாந்தகுமார்.
 பூவற்கரையானுக்காக:-உங்கள் பேபிஆர்ட்ஸ்

 வதிரி பூவற்கரைப்பிள்ளையார் ஆலயம்
இரண்டாம் திருவிழா
 மாம்பழத்திருவிழா 
24.07.2012

 கலகமே நோக்கமென நாரதர் கொண்டுவந்த
கனியதுவை பெற்றிடவே தந்தையின் சொற்படி
உலகமே எதுவென்று மனதினிலே நன்குணர்ந்து
உலகத்தை பெற்றோரே என்றெமக்கு உணர்த்தியவனே !
நலமுடன் அன்றுமுதல் மாங்கனிகள் பலவைத்து
நிவேதனம் செய்துனக்கு தொழுகின்றார் ! அடியவர்கள்
தலமதிலே இனிமையின் சுவைததும்பி இன்புறவே
திருமருவும் விழாதன்னை காண்போமே ! இந்நாளிலே !























24.07.2012 செவ்வாய் இரண்டாம் நாள் திருவிழா 
இரவு பகல் வெகு சிறப்பாக நடைபெற்றது.
படப்பிடிப்பு:-ஜெகன் சாந்தகுமார். 
 பூவற்கரையானுக்காக:-உங்கள் பேபிஆர்ட்ஸ்



வதிரி பூவற்கரைப்பிள்ளையார் ஆலயம்
மூன்றாம் திருவிழா
மதுரத்திருவிழா 
 25.07.2012

அண்ணமார் எனநின்று வழிபட்டு வந்தோமே !
ஆனபல பெரியோர்கள் ஆசார சீலர்களாய்
திண்ணமாய் கற்றுணர்ந்து ஆன்மீக பற்றுதலால்
திருமிகு விநாயகா ! உன்னையே பிரதிஸ்டை
வண்ணமாய் செய்தனரே  ! சுவைபடும் வாழ்வெமக்கு
வந்தமைய அலங்கார விழாதன்னை மகோற்சவமாய்
எண்ணித் துணிந்திங்கு மாற்றினோமே! ஐங்கரனே !
ஏற்றமுடன் மதுரத்திருவிழா காண்பாயே ! கணபதியே !






















25.07.2012 புதன் மூன்றாம் நாள் திருவிழா 
இரவு பகல் வெகு சிறப்பாக நடைபெற்றது.
 படப்பிடிப்பு:-ஜெகன் சாந்தகுமார்.
 பூவற்கரையானுக்காக:-உங்கள் பேபிஆர்ட்ஸ்


வதிரி பூவற்கரைப்பிள்ளையார் ஆலயம்
நான்காம் திருவிழா
 பூந்தண்டிகை திருவிழா 
26.07.2012

வாசமலர் சோலையாம் பூவற்கரையின் மலர்களாலே
விருப்புடனே அலங்காரம் செய்தழகு பார்ப்போமே !
வீசிடும் தென்றலும் உணர்ந்திடு முன்நாமம்
விளங்கிடும் பதிதனிலே வித்தகாவுன் அருளாட்சி
தேசுடனே நின்வதனம் காண்பதற்கே பூந்தண்டிகை
திருவிழா நன்நாளில் தோள்களிலே சுமந்துனை
ஆசிபெறவே வணங்குவோமே ! அன்பர்களை ஆட்கொள்ள
அருளாசி தருவாயே ! அங்குசனே அபயமுடன் !




































26.07.2012 வியாளன் நான்காம் நாள் திருவிழா 
இரவு பகல் வெகு சிறப்பாக நடைபெற்றது.
படப்பிடிப்பு:-ஜெகன் சாந்தகுமார். 
 பூவற்கரையானுக்காக:-உங்கள் பேபிஆர்ட்ஸ்


வதிரி பூவற்கரைப்பிள்ளையார் ஆலயம்
ஐந்தாம் திருவிழா
தீபவிளக்குத்திருவிழா
 27.072012

ஏற்றிடும் கரங்களும் துதித்திடும் மனங்களும்
ஏரம்பா உனையன்றி வேறொன்றும் இல்லையப்பா !
போற்றுவோம் உன்பாதம் ! புத்தியில் உறைபவனே !
பூவற்கரை  பாலகனே ! மனவிருள் அகற்றுபவனே !
காற்றினில் கலந்தவனே ! ஒளியினில்வருபவனே !
காண்பவர் நெஞ்சமெலாம் குளிர்ந்திட வைப்பனே !
சாற்றிடும் மலர்களும் நிறைகுடமும் விளக்குகளும்
சேர்ந்துமே வந்திடவே வீதிவலம் வருவாயே !





















































27.07.2012 வெள்ளி ஐந்தாம் நாள் திருவிழா 
இரவு பகல் வெகு சிறப்பாக நடைபெற்றது.
படப்பிடிப்பு:-ஜெகன் சாந்தகுமார். 
 பூவற்கரையானுக்காக:-உங்கள் பேபிஆர்ட்ஸ்


வதிரி பூவற்கரைப்பிள்ளையார் ஆலயம்
ஆறாம் திருவிழா
மஞ்சத் திருவிழா 
28.07.2012

தம்பிக்கு மணம்முடித்து மகிழ்வாய் நின்றவனே !
தந்தத்தை ஒடித்திங்கே பாரதம் சமைத்தவனே !
தும்பிக்கை முகத்தோனே ! ஐந்து கரத்தவனே !
தூயபதி பூவற்கரையின் மூத்த கொழுந்தே !
நம்பிக்கை வைத்துன்னை தொழுவோரை காப்பவனே !
நற்றமிழ் பாமாலை பண்ணோடு நாமிசைக்க
அம்பிகையின் புதல்வனே !அழகிய மஞ்சமேறி
அபயகரம் நீட்டிடவே வலம்வந்து அருள்வாயே !


















































28.07.2012 சனி ஆறாம் நாள் திருவிழா 
இரவு பகல் வெகு சிறப்பாக நடைபெற்றது.
படப்பிடிப்பு:-ஜெகன் சாந்தகுமார். 
 பூவற்கரையானுக்காக:-உங்கள் பேபிஆர்ட்ஸ்


வதிரி பூவற்கரைப்பிள்ளையார் ஆலயம்
ஏழாம் திருவிழா
சப்பறத்திருவிழா
29.07.2012

பாடல்கள்  பலகண்டாய்  பஜனைதனை  வெள்ளிதோறும்
பாங்காய்  பாலரெல்லாம்  பாடிடவும் கேட்டிடுவோய் !
ஆடலின் நாயகனாம் உன் அப்பன் அன்னைதனை
அறிவில் இருப்பிடமாய் தொழுதுமே நின்றவனே!
நாடாது உனையன்றி மனமெல்லாம் வேறில்லை
நற்பயன் தருமிந்த ஆலய வாசல்தனை
மூடாத உன்னருளால் பேரின்ப நிலைபெறவே
மகாகணேசா ! சப்பைரத பவனிதனை காட்டுமையா !








































29.07.2012 ஞாயிறு ஏழாம் நாள் சப்பறத் திருவிழாவும்
சுமங்கலி பூசையும்
இரவு பகல் வெகு சிறப்பாக நடைபெற்றது.
படப்பிடிப்பு:-ஜெகன் சாந்தகுமார்.
பூவற்கரையானுக்காக:-உங்கள் பேபிஆர்ட்ஸ்


வதிரி பூவற்கரைப்பிள்ளையார் ஆலயம்
எட்டாம் திருவிழா
வேட்டைத்திருவிழா 
30.07.2012

பேரிடர் வருங்கால் தீர்த்துமே வைப்பவனே !
பேரின்ப நிலைகாண எமக்கருளும் ஐங்கரனே !
யாரிடம் போவதுன் தலைவாசல் தனையன்றி
யாதுமே நீயாகி காவிரியோட வைத்தவா !
நேரிடும் வினையகல கையினிலே வில்லம்பும்
நேர்த்தியாய் ஏற்றியிங்கே மாவடி அண்ணமாரில்
போரிடும் பாங்கினனாய் வேட்டையாட பக்தர்கள்
பாடறிந்து புரவிமீது ஏறிநீயும் வாருமையா !



























































30.07.2012:-திங்கள் எட்டாம் நாள் 
பகல் வேட்டைதிருவிழாவும்
இரவு அன்னபட்சி ஊர்வலமும் வெகுசிறப்பாக
நடைபெற்றது. 
 படப்பிடிப்பு:-ஜெகன் சாந்தகுமார்.
 பூவற்கரையானுக்காக:-உங்கள் பேபிஆர்ட்ஸ்



வதிரி பூவற்கரைப்பிள்ளையார் ஆலயம்
ஒன்பதாம் திருவிழா
தேர்த்திருவிழா 
31.07.2012

அங்கமெலாம் நொந்துபட்டு தேரினடி அழித்திடும்
அடியவர் கூட்டமுனை தொடர்ந்து வந்திடவே !
எங்குமுன் புகழ்பாடும் ஓதுவார் அடியவர்களும்
ஏற்றவாம் பண்ணிசையால் உன்புகழ் பாடிடவே !
சங்குடனே சல்லாரி நாதஸ்வரமேளமுடன்
சிங்காரமாய் ஆடிவரும் காவடிகரகமும் சுற்றிவர
பங்கமிலா வாழ்வுதனை வேண்டுமுன் பக்தருக்காய்
பொற்பான தேரேறி வந்திடவே வேண்டுகின்றோம் !



































                                     31.07.2012 செவ்வாய் ஒன்பதாம் நாள் தேர்திருவிழா 
 வெகு சிறப்பாக நடைபெற்றது.
படப்பிடிப்பு:-ஜெகன் சாந்தகுமார்.
             ஜெஜேந்திரா 
மனோ
 பூவற்கரையானுக்காக:-உங்கள் பேபிஆர்ட்ஸ்

வதிரி பூவற்கரைப்பிள்ளையார் ஆலயம்
பத்தாம் திருவிழா
 தீர்த்தத்திருவிழா 
01.08.2012

அருளல் செய்திடவே ஈசானத் தீர்த்தமாடி
அபயகரம் காட்டிடும் களிற்றின் மாமுகனே !
பெருவளம் நிறைந்திடும் பூவற்கரை பதிமேவும்
புண்ணியனே ! தேவர்களை காத்தொருக்கால் நின்றவனே !
திருவுளங் கொண்டெமது அவலங்கள் நீக்கிடவே !
தொந்திக் கணபதியே கடைக்கண் பாராயோ !
வருமுந்தன் காட்சிகாண நிவேதனங்கள் செய்கின்றோம்
 வந்திங்கு நீராடி தோஷங்கள் களைவாயே !


















































 
       
  01.08.2012 புதன் பத்தாம் நாள் தீர்த்தோற்சவம் 
 வெகு சிறப்பாக நடைபெற்றது.
படப்பிடிப்பு:-ஜெகன் சாந்தகுமார்.
             ஜெஜேந்திரா 
            குமாரராஜன்
 பூவற்கரையானுக்காக:-உங்கள் பேபிஆர்ட்ஸ்

யாத்தவர்:- 
கவிஞர், 
வதிரி கணஎதிர்வீரசிங்கம்
யாவத்தை
வதிரி.
                
மேலும் பூவற்கரையானின்
மஹோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்ற பொழுது
அதை வெளிஉலகுக்கு காண்பிக்க
சகலவிதத்திலும் உதவிசெய்த அனவருக்கும் 
பூவற்கரையான் இணையதளம்,முகநூல்
சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
 பூவற்கரையானுக்காக:-உங்கள் பேபிஆர்ட்ஸ்